திருவண்ணாமலை
கீழ்பென்னாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா
|கீழ்பென்னாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா நடந்தது
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் கீழ்பென்னாத்தூர்அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா நடந்தது
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாணவ மாணவிகளின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் 9 தலைப்புகளில் 33 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. வருகிற 21-ந் தேதி வரை நடக்கும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் வருகிற 26-ந் தேதி மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இதன் தொடக்க விழா நேற்று கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் தேவாசீர்வாதம் தலைமை தாங்கினார்.
கொளத்தூர், ஜமீன்அகரம் அரசு உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கருணாகரன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் ராமமூர்த்தி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக ஒன்றிய குழுத் தலைவர் அய்யாக்கண்ணு கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார். இதில் பேரூராட்சி தலைவர் சரவணன், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை உமாதேவி ஆகியோர் பேசினர். இதில் மாணவ, மாணவிகள் இசை, நடனம் உள்பட பல்வேறு வகையான கலைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக அவர்கள் நாதஸ்வரம் இசைத்தது பார்வையாளர்களை கவர்ந்தது.
முடிவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) செல்வம் நன்றி கூறினார்.