< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலை போட்டிகள்
அரியலூர்
மாநில செய்திகள்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலை போட்டிகள்

தினத்தந்தி
|
9 Sept 2023 12:49 AM IST

பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலை போட்டிகள் நடந்தன.

ஜெயங்கொண்டம்:

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அரியலூர் மாவட்டம், அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளின் படைப்பாற்றலை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறைகளிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும், வாய்ப்பாட்டிசை, கருவிசை, நடனம், காட்சிகலை மற்றும் தனிநபர் நடிப்பு என்னும் 5 தலைப்புகளில் கலை பண்பாட்டு திருவிழா 2023-24-ம் கல்வி ஆண்டின் போட்டிகள் நேற்று ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டைல்காந்த், ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தவிக்குமார், வட்டாரக்கல்வி அலுவலர் ராசாத்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் கண்ணதாசன், அன்பரசன், சுதா ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பேசினர். ஆசிரியர் பயிற்றுனர்கள் போட்டியினை ஒருங்கிணைத்து நடத்தினர். போட்டியில் பள்ளி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். இப்போட்டியில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர், செந்துறை, அரியலூர் மற்றும் திருமானூர் ஆகிய 6 ஒன்றியங்களில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.

மேலும் செய்திகள்