< Back
மாநில செய்திகள்
கல்லூரி மாணவர்களுக்கு கலை போட்டிகள்
அரியலூர்
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்களுக்கு கலை போட்டிகள்

தினத்தந்தி
|
26 Sept 2023 12:45 AM IST

கல்லூரி மாணவர்களுக்கு கலை போட்டிகள் நடந்தன.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி மற்றும் வினாடி-வினா போட்டி ஆகியவை கல்லூரியின் ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் ராணி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் பவானி வரவேற்றார். இயற்பியல் துறை இணை பேராசிரியர் ராசமூர்த்தி, கணினி அறிவியல் துறை தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் மாணவிகளை பாராட்டி பேசினார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சுப்போட்டியில் முதலிடத்தை மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி கவுதமியும், இரண்டாம் இடத்தை மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி செந்தமிழ்ச்செல்வியும், மூன்றாம் இடத்தை மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி ரேணுகாவும் பிடித்தனர். கவிதைப்போட்டியில் மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி ரேணுகாகவும், இரண்டாம் இடத்தை மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவர் சந்தோஷும், மூன்றாம் இடத்தை மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவர் சிபிராஜும், கட்டுரை போட்டியில் முதலிடத்தை மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி வரலெட்சுமியும், இரண்டாம் இடத்தை இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி கோபிகாவும், மூன்றாம் இடத்தை மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி ரேணுகாகவும் பிடித்தனர். ஓவியப்போட்டியில் முதல் இடத்தை மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவர் அசோக்கும், இரண்டாம் இடத்தை மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவர் சிபிராஜும், மூன்றாம் இடத்தை இரண்டாம் ஆண்டு கணிதவியல் மாணவர் அருணும் பெற்றனர். வினாடி-வினா போட்டியில் முதலிடத்தை தமிழ்த்துறை மாணவ-மாணவிகளும், இரண்டாம் இடத்தை கணிதத்துறை மாணவ-மாணவிகளும், மூன்றாம் இடத்தை ஆங்கிலத்துறை மாணவ-மாணவிகளும் பெற்றனர். முடிவில் நுண்கலை மன்ற பொறுப்பாளர் வடிவேலன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்