< Back
மாநில செய்திகள்
கலைத்திருவிழாவில்   வென்றவர்களுக்கு பாராட்டு
திருப்பூர்
மாநில செய்திகள்

கலைத்திருவிழாவில் வென்றவர்களுக்கு பாராட்டு

தினத்தந்தி
|
14 Dec 2022 6:23 PM IST

கலைத்திருவிழாவில் வென்றவர்களுக்கு பாராட்டு

சேவூர்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகமெங்கும், உள்ள அரசுப்பள்ளி மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்த பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. மாவட்ட அளவில் திருப்பூர் ஜெய்வாபாய் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில், சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 4 முதல் பரிசைத்தட்டிச் சென்றனர். பிற மாநில நாட்டிய வகையில் 9-ம் வகுப்பு மாணவிகள் 8 பேர் முதல் பரிசு பெற்று மாநில அளவில் தேர்வாகி உள்ளனர். மேலும் ஒயிலாட்டம், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் 9 பேர், பிறவகை நடன வகையில் 8 மாணவர்களும், இசை துளை காற்றுக்கருவிகள் வகையில் (புல்லாங்குழல்) 9-ம் வகுப்பு மாணவன் சாய்ராம் ஆகியோர் மாவட்ட அளவில் தேர்வாகி மாநில அளவிலும் தேர்வாகி உள்ளனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி, மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் க.பால்ராஜ். மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

---

Related Tags :
மேலும் செய்திகள்