< Back
மாநில செய்திகள்
5¼ டன் ரேஷன் அரிசி பதுக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது
நாமக்கல்
மாநில செய்திகள்

5¼ டன் ரேஷன் அரிசி பதுக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது

தினத்தந்தி
|
30 Sept 2022 1:21 AM IST

பள்ளிபாளையம் பகுதியில் 5¼ டன் ரேஷன் அரிசியை பதுக்கிய நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு உள்ளார்.

ரேஷன் அரிசி பறிமுதல்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சத்யாநகர் பகுதியில் கடந்த 1-ந் தேதி ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பின்புறம் 106 மூட்டைகளில் அடுக்கி வைத்து இருந்த சுமார் 5¼ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சேட்டு என்கிற ராஜா (வயது40) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

குண்டர் சட்டத்தில் கைது

இவர் மீது மேலும் 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதால், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து கலெக்டர் ஸ்ரேயாசிங் ரேஷன் அரிசி பதுக்கிய வழக்கில் கைதான சேட்டு என்கிற ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைதொடர்ந்து அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்