< Back
மாநில செய்திகள்
பணம் வாங்கி கொண்டு பணி செய்யாமல் ஏமாற்றிய துணை ஒப்பந்ததாரர் கைது
சென்னை
மாநில செய்திகள்

பணம் வாங்கி கொண்டு பணி செய்யாமல் ஏமாற்றிய துணை ஒப்பந்ததாரர் கைது

தினத்தந்தி
|
26 Jun 2023 1:36 PM IST

ரூ.25 லட்சத்தை வாங்கி கொண்டு பணி செய்யாமல் ஏமாற்றிய துணை ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார்.

சென்னை பெரம்பூர், கண்ணபிரான் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 30). இவர், சென்னை மாநகராட்சியில் உள்ள பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து வேலை செய்து வருகிறார். ஜெயக்குமார், கோவையை சேர்ந்த துணை ஒப்பந்ததாரரான விஷ்ணு (30) என்பவரிடம் திரு.வி.க நகர், பல்லவன் சாலையில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் குறிப்பிட்ட பணியை செய்ய ஒப்படைத்தார். இதற்காக 2 கட்டங்களாக அவரிடம் ரூ.25 லட்சம் கொடுத்துள்ளார்.

ஆனால் இதுவரை மாநகராட்சி மைதானத்தில் பணி செய்யாமல் விஷ்ணு காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெயக்குமார் அளித்த புகாரின்பேரில் திரு.வி.க. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்