< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
கூலித்தொழிலாளி போக்சோவில் கைது
|20 March 2023 12:15 AM IST
நாமகிரிப்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
ராசிபுரம்
ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஒடுவன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் பிரவீன் குமார் (வயது 19) கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி சிறுமியின் பெற்றோர் ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மகளிர் போலீசார் பிரவீன்குமாரிடம் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின்கீழ் அவரை கைது செய்தனர். பின்னர் ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பிரவீன்குமாரை நீதிபதி உத்தரவின் பேரில் ராசிபுரம் கிளை சிறைச்சாலையில் பிரவீன் குமார் அடைக்கப்பட்டார்.