< Back
மாநில செய்திகள்
தனியார் நிறுவன ஊழியர் போக்சோவில் கைது
நாமக்கல்
மாநில செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர் போக்சோவில் கைது

தினத்தந்தி
|
31 Oct 2022 12:30 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

ராசிபுரம்

தனியார் நிறுவன ஊழியர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பைரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் சசிகுமார் (வயது 25). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் அதே ஊரை சேர்ந்த 17 வயது மாணவி ராசிபுரத்தில் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் சசிகுமார் அந்த மாணவியை பள்ளியில் இருந்து அழைத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி அந்த மாணவியின் தந்தை தனது மகளை காணவில்லை என்று ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பரில் ராசிபுரம் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கைது

இந்தநிலையில் நேற்று 17 வயது சிறுமியை கடத்தியதற்காக ராசிபுரம் போலீசார் சசிகுமாரை போக்சோவில் கைது செய்தனர். பிறகு ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் ராசிபுரம் கிளை சிறையில் அடைத்தனர். மாணவியை நாமக்கல் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்தனர்.

மேலும் செய்திகள்