< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவருக்கு நீதிமன்ற காவல்
மாநில செய்திகள்

கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவருக்கு நீதிமன்ற காவல்

தினத்தந்தி
|
20 Aug 2024 1:15 PM IST

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நா.த.க. முன்னாள் நிர்வாகி சிவராமன் கைதுசெய்யப்பட்டுள்ளார். என்.சி.சி. முகாமில் வைத்து இந்த சம்பவம் நடைபெற்றதாக சிவராமன், பள்ளி முதல்வர், தாளாளர் உள்ளிட்ட எட்டு பேர் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சிவராமன், என்.சி.சி. போலி பயிற்சியாளர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, வன்கொடுமை வழக்கில் கைதான சிவராமனை அடுத்த மாதம் 2-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிபதி உத்தரவை தொடர்ந்து சிவராமனை போலீசார் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்