< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
எலக்ட்ரீசியனை வழிமறித்து பணம் பறித்தவர் கைது
|11 Jun 2023 2:06 PM IST
திருவள்ளூர் அருகே எலக்ட்ரீசியனை வழிமறித்து பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் விக்டர் (வயது 35). எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 8-ந் தேதி வேலை முடித்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். கடம்பத்தூர் - விடையூர் வழியாக வந்துக் கொண்டிருந்த போது விடையூர் இந்திரா நகரை சேர்ந்த சந்தோஷ் (21) என்பவர் ஜான் விக்டரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி மாமுல் கேட்டுள்ளார். அப்பொழுது ஜான் விக்டர் மாமூல் தர முடியாது என்று கூறியதால் ஆத்திரமடைந்து அவரை தாக்கி அவரது பாக்கெட்டில் இருந்து ரூ.500 பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து ஜான் விக்டர் கொடுத்த புகாரின் பேரில் திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷை கைது செய்தனர்.