< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் கைது
|15 July 2023 12:30 AM IST
போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் பைபாஸ் சாலையில் புதிய பஸ் நிலையம் உள்ளது. இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு வாலிபர் சாலையின் குறுக்கே நின்று கொண்டு அந்த பகுதியில் சென்றவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த அரியலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார், அந்த வாலிபரை வீட்டுக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர், போலீசாரையும் தரக்குறைவாக பேசி வாக்குவாதம் செய்துள்ளார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் அரியலூர் சிங்காரத் தெருவில் வசிக்கும் செல்வத்தின் மகன் சுபாஷ்(27) என்பது தெரியவந்தது. இது குறித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.