< Back
மாநில செய்திகள்
மோகனூரில்  `நாங்களும் ரவுடிதான் என தகராறு செய்த 2 பேர் கைது
நாமக்கல்
மாநில செய்திகள்

மோகனூரில் `நாங்களும் ரவுடிதான்' என தகராறு செய்த 2 பேர் கைது

தினத்தந்தி
|
30 Oct 2022 12:15 AM IST

மோகனூரில் `நாங்களும் ரவுடிதான்' என தகராறு செய்த 2 பேர் கைது

மோகனூர்:

மோகனூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழழகன் மற்றும் போலீசார் மோகனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அரசு மருத்துவமனை அருகே மோகனூர் மேட்டு தெருவை சேர்ந்த தர்மராஜ் (வயது 25), முத்துராஜா தெருவை சேர்ந்த நந்தகுமார் என்ற ஆறுமுகம் (27) ஆகியோர் `நாங்களும் ரவுடிதான்' என கூறி கொண்டு போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த போலீசார் 2 பேரையும் எச்சரித்தனர். ஆனால் போலீசார் பேச்சை கேட்காமல் அவர்கள் தொடர்ந்து தகராறு செய்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்