< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 3 பேர் கைது
|15 Jun 2023 1:00 AM IST
பொள்ளாச்சி-மார்க்கெட் ரோட்டில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி-மார்க்கெட் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மதுபான பாரில் குடிபோதையில் சிலர் தகராறில் ஈடுபடுவதாக நகர மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு போலீசார் சென்றனர். அதற்குள் 3 பேரும் பாரை விட்டு வெளியே வந்து நடுரோட்டில் தகராறில் ஈடுபட்டனர். இதை தடுக்க சென்ற போலீசாருடன் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் தகராறில் ஈடுபட்டவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் ரங்கசமுத்திரத்தை சேர்ந்த சைன், சீனிவாசபுரத்தை சேர்ந்த ராஜபூபதி, ஆனைமலையை சேர்ந்த தயாநிதி ஆகியோர் என்பதும், தனியார் செல்போன் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதிகளாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.