< Back
மாநில செய்திகள்
பஸ்சில் செல்போன் திருடிய 3 பெண்கள் கைது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

பஸ்சில் செல்போன் திருடிய 3 பெண்கள் கைது

தினத்தந்தி
|
14 Oct 2023 12:30 AM IST

ஓசூர்:

சூளகிரி அருகே கரியசந்திரம் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி செல்வி விண்ணரசி (வயது 29). இவர் சம்பவத்தன்று பஸ்சில் பயணம் செய்தார். அப்போது ஓடும் பஸ்சில் அவருடைய செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம் திருட்டு போனது. இதுகுறித்து விண்ணரசி ஓசூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்த ரேணுகா (45), பார்வதி (55) மற்றும் சாவித்திரி (58) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்