< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
நெல்லை ரெயில்வே துணை சூப்பிரண்டுக்கு பிடிவாரண்டு- மேலூர் கோர்ட்டு உத்தரவு
|11 Oct 2023 2:26 AM IST
நெல்லை ரெயில்வே துணை சூப்பிரண்டுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மேலூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
மேலூர்
நெல்லை ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டாக இளங்கோவன் பணிபுரிகிறார். இவர் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே இன்ஸ்பெக்டராக இருந்தவர். இவர் கொட்டாம்பட்டியில் வேலை செய்தபோது பதிவு செய்த கொலை முயற்சி வழக்கானது மேலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக பல முறை சம்மன் அனுப்பியும் இளங்கோவன், மேலூர் கோர்ட்டில் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இதனால் துணை சூப்பிரண்டு இளங்கோவனை ஆஜர்படுத்த பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி கணேசன் உத்தரவிட்டார்.