கலாஷேத்ரா விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை உடனே கைதுசெய்க: சீமான் வலியுறுத்தல்
|கலாஷேத்ரா விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை உடனே கைதுசெய்யவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கலாஷேத்ரா விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை உடனே கைதுசெய்யவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
4 ஆசிரியர்கள் 10 ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சி தருகிறது என்றும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர்களை பணிநீக்கம் செய்வதேடு, அவர்கள் கைதுசெய்யவேண்டும் எனவும் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.