< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
|31 Jan 2023 12:15 AM IST
கடையம் அருகே போக்சோ சட்டத்தில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கடையம்:
கடையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 16-ந் தேதி காணாமல் போனதாக அவரது பெற்றோர் கடையம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் பரும்பு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சண்முகம் மகன் கருப்பசாமி என்பவர் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.