< Back
மாநில செய்திகள்
இரணியல் அருகே அரசு பஸ் மீது கல்வீசிய வாலிபர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

இரணியல் அருகே அரசு பஸ் மீது கல்வீசிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
3 Jan 2023 3:07 AM IST

இரணியல் அருகே அரசு பஸ் மீது கல்வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திங்கள்சந்தை:

இரணியல் அருகே அரசு பஸ் மீது கல்வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

அரசு பஸ் மீது கல்வீச்சு

நாகர்கோவிலில் இருந்து மிடாலத்துக்கு கடந்த 31-ந்தேதி இரவு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை திருவட்டார் ஆனையடி பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவர் ஓட்டினார். ஐரேனிபுரம் பகுதியை சேர்ந்த ஜஸ்டின் கண்டக்டராக இருந்தார்.

அந்த பஸ் இரணியல் அருகே உள்ள மடவிளாகம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது நடந்து சென்ற 2 பேர் பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்கினார்கள். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

வாலிபர் கைது

இதுபற்றி சுபாஷ் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அரசு பஸ் கண்ணாடியை கல்வீசி உடைத்ததாக வில்லுக்குறி அருகே திருவிடைக்கோடு பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் தொடர்புடைய இன்னொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்