< Back
மாநில செய்திகள்
அரூர் அருகே நாட்டுத்துப்பாக்கியால் நாயை சுட்டவர் கைது
தர்மபுரி
மாநில செய்திகள்

அரூர் அருகே நாட்டுத்துப்பாக்கியால் நாயை சுட்டவர் கைது

தினத்தந்தி
|
22 Jun 2023 12:30 AM IST

அரூர்:

தர்மபுரி மாவட்டம் சித்தேரி அருகே உள்ள குண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன். விவசாயியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் (வயது 45) என்பவருக்கும் நிலப்பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெங்கட்ராமன் நாட்டுத்துப்பாக்கியால் காளியப்பன் வளர்த்து வந்த நாயை சுட்டு விட்டார். இதில் காயமடைந்த நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த அரூர் வனச்சரக அலுவலர் நீலகண்டன் குண்டம்பட்டி கிராமத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து நாய் சுடப்பட்ட விவகாரம் தொடர்பாக அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து வெங்கட்ராமனை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்