< Back
மாநில செய்திகள்
ஆத்தூர் அருகே இன்ஸ்டாகிராம் காதலியுடன் ஓட்டலில் உல்லாசம்-வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது
சேலம்
மாநில செய்திகள்

ஆத்தூர் அருகே இன்ஸ்டாகிராம் காதலியுடன் ஓட்டலில் உல்லாசம்-வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
10 Jun 2023 3:26 AM IST

ஆத்தூர் அருகே இன்ஸ்டாகிராம் காதலியுடன் ஓட்டலில் உல்லாசமாக இருந்த வாலிபர் வீடியோ எடுத்து மிரட்டியதால் கைது செய்யப்பட்டார்.

ஆத்தூர்:

இன்ஸ்டாகிராம் காதல்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மஞ்சினி பூங்கவாடியை சேர்ந்த குணசேகரன் மகன் சுரேஷ்குமார் (வயது 32). பட்டதாரியான இவருக்கும், சென்னை டி.நகர் பகுதியை சேர்ந்த 23 வயதான ஆசிரியை ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இதற்கிடையே அந்த பெண், திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். அதன்பிறகு சுரேஷ்குமார், அந்த ஆசிரியையுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

ஓட்டலில் உல்லாசம்

பின்னர் அந்த ஆசிரியையுடன், திருச்சியில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது, அதனை சுரேஷ்குமார் வீடியோவாக எடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்பிறகு சுரேஷ்குமார், அந்த ஆசிரியைைய தொடர்பு கொண்டு, நான் அழைக்கும் போதெல்லாம் உல்லாசமாக இருக்க வர வேண்டும். இல்லை என்றால் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆசிரியை ஆத்தூர் ரூரல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சுரேஷ்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்