< Back
மாநில செய்திகள்

கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
தங்கும் விடுதி உரிமையாளரை மிரட்டிய ரவுடி கைது

29 May 2023 12:30 AM IST
ஊத்தங்கரை:
ஊத்தங்கரையில் உள்ள கிருஷ்ணகிரி சாலையில் வசித்து வருபவர் முருகன் (வயது 54). தங்கும் விடுதி உரிமையாளர். கடந்த 26-ந் தேதி இரவு இவர் தங்கும் விடுதி முன்பு இருந்தபோது அங்கு வந்த ஒருவர் தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்து கேட்டபோது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக முருகன் கொடுத்த புகாரின்பேரில் ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முருகனை மிரட்டியவர் ஊத்தங்கரை பாரதிபுரத்தை சேர்ந்த வெள்ளைசாமி (41) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். கைதான வெள்ளைசாமி பிரபல ரவுடி ஆவார். ஊத்தங்கரை மற்றும் நாட்றாம்பாளையத்தில் 2 கொலை வழக்குகள் உள்பட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ள அவர் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.