< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
மது விற்ற 2 பேர் கைது
|29 May 2023 12:30 AM IST
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போளாரி கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்ற வெங்கடேஷ் (வயது 45) என்பவரை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் ஓசதொட்டி கிராமத்தில் மது விற்ற ரமேஷ் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.