< Back
மாநில செய்திகள்
அரூர் அருகேமோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியவர் கைது
தர்மபுரி
மாநில செய்திகள்

அரூர் அருகேமோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியவர் கைது

தினத்தந்தி
|
25 May 2023 12:30 AM IST

அரூர்:

அரூர் போலீசார் சித்தேரி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் இருந்த பையில் 250 மில்லி அளவு கொண்ட 14 சாராயப் பாக்கெட்டுகள் சிக்கின. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தேக்கல்பட்டியை சேர்ந்த பழனி (வயது 48) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது விற்பனை செய்யும் நோக்கத்துடன் சாராயத்தை கடத்திச் செல்வது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பழனியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்