< Back
மாநில செய்திகள்
கம்பைநல்லூர் அருகேகடனை திருப்பி கேட்டவரை தாக்கிய 2 பேர் கைது
தர்மபுரி
மாநில செய்திகள்

கம்பைநல்லூர் அருகேகடனை திருப்பி கேட்டவரை தாக்கிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
11 May 2023 12:30 AM IST

மொரப்பூர்:

கம்பைநல்லூர் அருகே உள்ள ஆல்ரப்பட்டி மேட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 49). இவர் சம்பவத்தன்று கம்பைநல்லூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஹரிகரன் (21) என்பவரிடம் தனக்கு தர வேண்டிய ரூ.200 கடனை திருப்பி கேட்டுள்ளார். அப்போது ஹரிகரன் மற்றும் பெரிய முருக்கம்பட்டியை சேர்ந்த முருகன் மகன் சரவணன் வயது 27 ஆகியோர் சேர்ந்து பழனியை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனி கம்பைநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து ஹரிகரன் மற்றும் சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்