< Back
மாநில செய்திகள்
ஓசூரில்பெண்ணிடம் நகை ஜேப்படி செய்த 2 பேர் கைது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூரில்பெண்ணிடம் நகை ஜேப்படி செய்த 2 பேர் கைது

தினத்தந்தி
|
8 May 2023 11:57 PM IST

ஓசூர்:

ஓசூர் தாலுகா மத்திகிரி சிப்பாய்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரகலா (வயது 45). இவர் கடந்த 7-ந் தேதி ஓசூர் அரசு ஆஸ்பத்திரி அருகில் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அருகில் வந்த 2 பெண்கள் சந்திரகலா விரலில் அணிந்திருந்த 3 பவுன் தங்க மோதிரத்தை நைசாக ஜேப்படி செய்து கொண்டு தப்பி ஓட முயன்றனர். இதை பார்த்த சந்திரகலா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை பிடித்து ஓசூர் டவுன் போலீசில் ஒப்படைத்தார்.

பிடிபட்ட பெண்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பத்தை சேர்ந்த லாவண்யா (22), மீனாட்சி (50) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்