தர்மபுரி
அரூர் அருகேகள் விற்ற 3 பேர் கைது
|அரூர்:
தர்மபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி பகுதியில் உள்ள சில விவசாய நிலங்களில் கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து பணி மேற்கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மால கபாடியை சேர்ந்த பாப்பு (வயது 57), கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த மார்க்கண்டேயன் (53), எச்.புதுப்பட்டியை சேர்ந்த முனுசாமி (40) ஆகியோர் விற்பனைக்காக கள்ளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த 3 பேரிடம் இருந்து மொத்தம் 21 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதை பரிசோதித்த போது போதையை அதிகரிப்பதற்காக சில பொருட்களை கள்ளில் கலந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கோபிநாதம்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.