< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பெண்ணை தாக்கியவர் கைது
|31 March 2023 12:30 AM IST
குருபரப்பள்ளி:
மகாராஜகடை அடுத்த கோதிகுட்லப்பள்ளியை சேர்ந்தவர் மேகலா (வயது 50). இவர் அதே பகுதியை சேர்ந்த விவசாயி மோகன் (53) என்பவரிடம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு 72 சென்ட் நிலத்தை ரூ.9 லட்சத்துக்கு வாங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி மோகன் ஒரு வருடத்திற்கு முன் விற்ற நிலத்திற்கு மேலும் ரூ.50 ஆயிரம் வேண்டும் என கேட்டு தகராறு செய்தார். பணம் தர மறுத்த மேகலாவை உருட்டுகட்டையால் அடித்து தாக்கினாராம். இதில் காயமடைந்த மேகலா கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின்பேரில் மகாராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனை கைது செய்தனர்.