< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
கர்நாடக மாநிலத்துக்கு கடத்த இருந்த150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்ஒருவர் கைது
|18 March 2023 12:30 AM IST
கிருஷ்ணகிரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி, மூர்த்தி, நேரு ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்- ஆனேக்கல் சாலையில் உள்ள பூனப்பள்ளி சோதனைச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் 150 கிலோ எடை கொண்ட 3 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்ததும், அதை கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி செல்ல இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அரிசி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், அதை கடத்திய மத்திகிரி சிப்பாய்பள்ளம் கிராமத்தை சேர்ந்த பைரோஸ்கான் (வயது 38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.விசாரணையில், அவர் சுற்றுவட்டார கிராமங்களில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகாவிற்கு கடத்தியது தெரியவந்தது.