< Back
மாநில செய்திகள்
ஓசூரில்சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி போக்சோவில் கைது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூரில்சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி போக்சோவில் கைது

தினத்தந்தி
|
18 March 2023 12:30 AM IST

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரண்டபள்ளி பகுதியை சேர்ந்த துரை என்பவரது மகன் நாராயணன் (45). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று ஓசூர் பகுதியை சேர்ந்த உறவினரான 6 வயது சிறுமிக்கு வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ராணி விசாரணை செய்து நாராயணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

மேலும் செய்திகள்