< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
பெண்ணிடம் தகராறு செய்த 3 பேர் கைது
|10 March 2023 12:30 AM IST
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே உள்ள கொல்லக்கொட்டாயை சேர்ந்தவர் பவித்ரா (வயது 23). அதே பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன் (43). இவர்கள் இருவரின் நிலங்கள் அருகருகே உள்ளன. இந்த நிலங்களுக்கு செல்லும் நடைபாதை விவகாரத்தில் பிரச்சினை இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் பவித்ராவை, வேடியப்பன் தரப்பினர் தரக்குறைவாக திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து பவித்ரா கொடுத்த புகாரின்பேரில் வேடியப்பன், லட்சுமி (38), சின்னபையன் (65) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.