கிருஷ்ணகிரி
பெங்களூருவில் இருந்து சென்னைக்குகாரில் ரூ.5½ லட்சம் குட்கா கடத்தல் வடமாநில வாலிபர் கைது
|கிருஷ்ணகிரி:
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய ரூ.5½ லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குட்கா கடத்தல்
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமர்நாத் மற்றும் போலீசார் சுங்கச்சாவடி அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரு சாலையில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 495 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான்பராக், பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
வாலிபர் கைது
விசாரணையில் குட்கா பெங்களூருவில் இருந்துசென்னைக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து குட்கா கடத்தியதாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரகுராம் (வயது 24) என்பவரைபோலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சத்து 56 ஆயிரத்து 800 மதிப்புள்ள 495 கிலோ குட்காமற்றும் கார் பறிமுதல்செய்யப்பட்டது.