< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
அரூரில் டிரைவரிடம் செல்போன் பறிப்பு; சிறுவன் கைது
|28 Feb 2023 12:30 AM IST
அரூர்:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள எடத்தானூரை சேர்ந்தவர் சூர்யா (வயது 20). டிரைவர். இவர் நேற்று மொரப்பூர் செல்வதற்காக அரூர் அம்பேத்கர் நகர் வழியாக நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் சூர்யாவிடம் நீ எந்த ஊர்? என கேட்டு மிரட்டி அவர் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து சூர்யா அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அரூர் போலீசார் விசாரணை நடத்தி அம்பேத்கர் நகரை சேர்ந்த 15 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.