நாமக்கல்
வெண்ணந்தூரில்விசைத்தறி தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடியவர் கைது
|வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அங்காளம்மன் கோவில் அருகே ஹரி நகர் பகுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசைத்தறி தொழிலாளி கந்தசாமி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம் மற்றும் 13 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து கந்தசாமி வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி தலைமையில் தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி வந்தனர்.
இதற்கிடையே வெண்ணந்தூர் பஸ் நிறுத்த பகுதியில் சந்தேககம் ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதையடுத்து வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்து அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவர் வெண்ணந்தூர் அங்காளம்மன் கோவில் ஹரி நகர் பகுதியை சேர்ந்த அங்கமுத்து மகன் கந்தசாமி (46) என்பதும், அவர் கந்தசாமி வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து 15,பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.