ஈரோடு
கோபி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் 2 பேர் கைது
|கோபி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் 2 பேர் கைது
நம்பியூர்
உள்ள அளுக்குளி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி வினோபிரியா (வயது 32). இவர் நம்பியூர் அருகே மூணாம்பள்ளியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவர் வேலை முடிந்து வீட்டுக்கு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். மூணாம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது அந்த வழியாக வந்த 2 பேர் வினோபிரியாவை தடுத்து நிறுத்தி அவர் வைத்திருந்த செல்போனை பறித்துவிட்டு சென்றனர். இதுகுறித்து அவர் நம்பியூர் போலீசில் புகார் செய்தார். அதன்போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்து சென்றவர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நம்பியூர் பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம் அருகே நம்பியூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர்கள் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கோகுல் (22) மற்றும் அனுப்பர்பாளையம் கஸ்தூரிபாய் வீதியை சேர்ந்த நவீன்ராஜ் (20) என்பதும், அவர்கள் 2 பேரும் சேர்ந்து வினோபிரியாவிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும்,' தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மற்றும் செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.