< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
கேர்மாளம் வனப்பகுதியில் சுற்றித்திரிந்தவருக்கு ரூ.1¼ லட்சம் அபராதம்
|10 Jan 2023 2:52 AM IST
கேர்மாளம் வனப்பகுதியில் சுற்றித்திரிந்தவருக்கு ரூ.1¼ லட்சம் அபராதம்
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கேர்மாளம் வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் வனச்சரகர் தினேஷ் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒருவர் சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்துள்ளார். அவரை பிடித்து விசாரணை செய்ததில், அதில் அவர் கர்நாடக மாநிலம் உத்தூர் கிராமத்தை சேர்ந்த சிவா என்பதும், அவர் அனுமதியின்றி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு வனத்துறையினர் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதித்தார்கள்.