ஈரோடு
அந்தியூரில் ரூ.1 கோடிக்கு பட்டு சேலை வாங்கி ஏமாற்றிய பெண் கைது- 3 பேருக்கு வலைவீச்சு
|அந்தியூரில் ரூ.1 கோடிக்கு பட்டு சேலை வாங்கி ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
அந்தியூர்
அந்தியூரில் ரூ.1 கோடிக்கு பட்டு சேலை வாங்கி ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பட்டு சேலை
அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகவதி அம்மன் கோவிலை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 45). பட்டு சேலை உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கோவை மாவட்டம் சுங்கம் பகுதியைச் சேர்ந்த சுஜாதா (42) என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் பட்டு சேலை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சுஜாதா தனக்கு தெரிந்த 3 பேரை அறிமுகப்படுத்தி அவர்களுக்கும் பட்டு சேலை கொடுக்கும்படி அறிமுகம் செய்துள்ளார்.
கைது
இதையடுத்து லட்சுமணன் சுஜாதாவின் பேச்சை நம்பி தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த சிலரிடம் இருந்து சுஜாதாவுக்கும் அந்த 3 பேருக்கும் சேர்த்து ரூ.1 கோடி மதிப்பிலான பட்டுப்புடவைகளை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.
சேலை வாங்கிசென்ற பின்னர் அதற்கான பணத்தை 4 பேரும் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதுபற்றி லட்சுமணன் செல்போனில் 4 பேரையும் தொடர்பு கொண்டு கேட்டாலும் முறையாக அவர்கள் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக லட்சுமணன் இதுகுறித்து அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பட்டு சேலை வாங்கி பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக சுஜாதாவை கைது செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.