< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
|9 Jan 2023 1:46 AM IST
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கெங்கவல்லி:
கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சி சமத்துவபுரம் பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரன். இவருடைய மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா கம்பைநல்லூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகன் அல்லிமுத்து (வயது 24), அதே பகுதியை சேர்ந்த காளியப்பன் மகன் பூபதி (23) ஆகிய இருவரும் ராஜேந்திரன் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. உடனே போலீசார் இருவரையும் கைது செய்து மோட்டார் சைக்கிளை மீட்டனர். திருட்டு போன மோட்டார் சைக்கிளை ஒரே வாரத்தில் கண்டுபிடித்த சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.