< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்லில் கஞ்சா விற்ற 6 பேர் கைது
திண்டுக்கல்
மாநில செய்திகள்

திண்டுக்கல்லில் கஞ்சா விற்ற 6 பேர் கைது

தினத்தந்தி
|
27 Dec 2022 8:47 PM IST

திண்டுக்கல்லில் கஞ்சா விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையை சேர்ந்த போலீசார் நேற்று நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது காமராஜபுரம் பொது கழிப்பறை அருகே சந்தேகப்படும்படி நின்ற 6 பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 32), முள்ளிபாடியை சேர்ந்த ராஜசேகர் (29), திருப்பூரை சேர்ந்த திலீப்குமார் (27), பழனியை சேர்ந்த வாய்க்கால் சாமி (42), காமராஜபுரத்தை சேர்ந்த மனோஜ் குமார் (19), வீரபாண்டி (24) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், 6 பேரையும் மேற்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன் பேரில் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர் உள்பட 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்