< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
மது விற்ற 2 பேர் கைது
|25 Dec 2022 12:15 AM IST
அரூர்:
அரூர் பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 4 ரோடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அரூரை சேர்ந்த சந்திரசேகர் (வயது 29), பேத்தம்பட்டியை சேர்ந்த ராஜீவ்காந்தி (25) என தெரியவந்தது. இவர்கள் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 136 மதுபாட்டில்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.