ஈரோடு
விஜயமங்கலத்தில் கார் திருடிய 2 பேர் கைது
|விஜயமங்கலத்தில் கார் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
பெருந்துறை
விஜயமங்கலத்தில் கார் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
கார் திருட்டு
விஜயமங்கலம் அருகே உள்ள மூங்கில்பாளையத்தை சேர்ந்தவர் சபரிபாலசங்கர் (வயது 42). இவர் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த 4- ந் தேதி ஓட்டலுக்கு முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த இவருடைய காரை யாரோ திருடி சென்றுவிட்டார்கள்.
இது குறித்து சபரிபாலசங்கர் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் காரை திருடி சென்றவர்களை வலைவீசி தேடி வந்தார்கள்.
2 பேர் கைது
இந்த நிலையில், திருடப்பட்ட கார் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள வெள்ளிரவெளியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வெள்ளிரவெளிக்கு சென்ற போலீசார் அங்கு கார்த்தி (28) என்பவர் வீட்டில் நின்றிருந்த சபரிபாலசங்கரின் காரை மீட்டார்கள். பின்னர் கார்த்தியிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் கார்த்தியும், அவருடைய நண்பர்
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்த பிரகாஷ் (27) என்பவரும் சேர்ந்து, காரை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் கார்த்தியையும், பிரகாசையும் கைது செய்தார்கள்.