< Back
மாநில செய்திகள்
ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கோவிலில் யாக சாலை வளர்க்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்; திராவிடர் விடுதலை கழகத்தினர் 12 பேர் கைது
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கோவிலில் யாக சாலை வளர்க்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்; திராவிடர் விடுதலை கழகத்தினர் 12 பேர் கைது

தினத்தந்தி
|
2 Dec 2022 2:27 AM IST

ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கோவிலில் யாக சாலை வளர்க்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலை கழகத்தினர் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கோவிலில் யாக சாலை வளர்க்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் விடுதலை கழகத்தினர் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

யாக சாலைக்கு எதிர்ப்பு

ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற 4-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கும்பாபிஷேக விழாவுக்கான யாக சாலை கோவிலுக்கு அருகில் மாநகராட்சி அலுவலக புதிய கட்டிடத்துக்கு முன்பு வளர்க்கப்பட்டது.

இந்த நிலையில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் யாக சாலை வளர்ப்பது மதச்சார்பின்மைக்கு எதிராக உள்ளதாகவும், அந்த யாக சாலையை அகற்ற வேண்டும் எனவும் திராவிடர் விடுதலை கழகத்தினர் வலியுறுத்தினர். மேலும், யாக சாலையை அகற்றும் போராட்டத்தையும் அவர்கள் அறிவித்தனர்.

12 பேர் கைது

அதன்படி திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்தவர்கள் நேற்று காலை கைகளில் கடப்பாரை, மண்வெட்டியுடன் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் திரண்டனர். அவர்கள் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் யாகசாலை வளர்க்க கூடாது என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தக்குமார் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள். இதில் ஒரு பெண் உள்பட மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த போராட்டத்தையொட்டி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Tags :
மேலும் செய்திகள்