< Back
மாநில செய்திகள்
கோபி அருகே தள்ளுவண்டிகளில் மது விற்ற 3 பேர் கைது
ஈரோடு
மாநில செய்திகள்

கோபி அருகே தள்ளுவண்டிகளில் மது விற்ற 3 பேர் கைது

தினத்தந்தி
|
2 Dec 2022 2:04 AM IST

கோபி அருகே தள்ளுவண்டிகளில் மது விற்ற 3 பேர் கைது

கடத்தூர்

உள்ள கடத்தூர் பகுதியில் தள்ளுவண்டிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று ரோந்து சுற்றி கண்காணித்து வந்தனர்.

அப்போது தள்ளுவண்டிகளில் மது விற்றதாக உக்கரம் குப்பன் துறையை சேர்ந்த நடு பழனி (வயது 75), அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி (40), வண்டிபாளையத்தை சேர்ந்த மருதாச்சலம் (46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்