< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
|26 Nov 2022 10:57 PM IST
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கேணிக்கரை,
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகப்பிரியா ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ராமநாதபுரம் பஸ்நிலையம் அருகில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் சோதனையிட்டபோது அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து ரூ.2 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக பெட்டிக்கடைக்காரரான எம்.எஸ்.கே.நகர் விஜயராம் மகன் வினோத்குமார் (வயது34) என்பவரை கைது செய்தனர்.