< Back
மாநில செய்திகள்
மது விற்ற சில்லி சிக்கன் கடைக்காரர் கைது
நாமக்கல்
மாநில செய்திகள்

மது விற்ற சில்லி சிக்கன் கடைக்காரர் கைது

தினத்தந்தி
|
20 Nov 2022 12:15 AM IST

மது விற்ற சில்லி சிக்கன் கடைக்காரர் கைது

எருமப்பட்டி:

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 43). இவர் எருமப்பட்டி அருகே உள்ள செவிந்திபட்டியில் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவருடைய சில்லி சிக்கன் கடையில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் கடையை சோதனை செய்தபோது அங்கு விற்பனைக்காக 17 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. பின்னர் சுப்பிரமணியை கைது செய்த போலீசார் கடையில் இருந்த 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்