ஈரோடு
நம்பியூர் அருகே ஆடுகளை திருடி இறைச்சி கடையில் விற்ற 2 பேர் கைது
|நம்பியூர் அருகே ஆடுகளை திருடி இறைச்சி கடையில் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
நம்பியூர்
நம்பியூர் அருகே ஆடுகளை திருடி இறைச்சி கடையில் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
ஆடுகள் திருட்டு
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மலையபாளையம் ஏரிக்காட்டு பள்ளத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு ஆடுகளை கட்டி வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் வெளியே வந்து பார்த்தபோது 2 ஆடுகளை காணவில்ைல. யாரோ திருடி சென்றது தெரிந்தது. இதையடுத்து பொன்னுச்சாமி அப்பகுதியை சேர்ந்த சிலருடன் சேர்ந்து ஆட்டை திருடி சென்றவர்களை தேடினார்.
அப்போது திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள தட்டாங்குட்டை என்ற இடத்தில் உள்ள ஒரு இறைச்சி கடையில் பொன்னுச்சாமியின் 2 ஆடுகளும் கட்டப்பட்டு இருந்தது.
2 பேர் கைது
இதைப்பார்்த்த பொன்னுசாமி கடைக்காரரிடம் இது என்னுடைய ஆடுகள் என்றார். அதற்கு கடைக்காரர் 2 பேர் இதை கொண்டு வந்து விற்றார்கள் என்றார்.
இதுகுறித்து பொன்னுசாமி பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஆடுகளை திருடி இறைச்சி கடையில் விற்றது தொரவலூர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கராஜ் (வயது 27), மணிகண்டன் (30) ஆகியோர் என்பது தெரிந்தது. இதையடுத்து பெருமாநல்லூர் போலீசார் இருவரையும் பிடித்து வரப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தார்கள். இதைத்தொடர்ந்து வரப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார்கள்.