< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
சென்னிமலை அருகே மரநாயை வேட்டையாடி சமைத்த 3 பேர் கைது
|11 Nov 2022 2:42 AM IST
சென்னிமலை அருகே மரநாயை வேட்டையாடி சமைத்த 3 பேர் கைது
சென்னிமலை அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியில் ஒரு வீட்டில் மரநாய்க்கறி சமைத்து சாப்பிடுவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு வனச்சரகர் சுரேஷ், வனவர் சந்தோஷ், சென்னிமலை வனக்காப்பாளர் பாரதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்தனர். அப்போது 3 பேர் மரநாயை வேட்டையாடி அதை சமைத்துக்கொண்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் அம்மாபாளையம் காலனியை சேர்ந்த மகேஷ் (வயது 47), முருகேஷ் (35), ரங்கராஜ் (36) ஆகியோர் என்பதும், இவர்கள் நாய்களை வைத்து மரநாயை வேட்டையாடி அதை வீட்டில் வைத்து சமைத்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.