நாமக்கல்
குமாரபாளையம் அருகே மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளி கைது
|குமாரபாளையம் அருகே மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளி கைது
பள்ளிபாளையம்:
குமாரபாளையம் அருகே சடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெத்தனியார் (வயது 40). தொழிலாளி. இவருடைய மனைவி விஜயமேரி (36). இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட பெத்தனியார் அவரிடம் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று அங்குள்ள கடைக்கு சென்ற விஜயமேரி ஒருவருடன் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த பெத்தனியார் மனைவியை கண்டித்து தகாத வார்த்தையில் திட்டியதுடன் நெஞ்சில் கத்தியால் குத்தினார். விஜயமேரி வலியால் சத்தம் போட அக்கம் பக்கத்தின் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் பெத்தனியார் அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர் விஜயமேரி மீட்கப்பட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பெத்தனியாரை நேற்று கைது செய்தனர்.