< Back
மாநில செய்திகள்
ராசிபுரத்தில்   பெண்ணிடம் நகை பறித்த சேலம் வாலிபர் கைது
நாமக்கல்
மாநில செய்திகள்

ராசிபுரத்தில் பெண்ணிடம் நகை பறித்த சேலம் வாலிபர் கைது

தினத்தந்தி
|
6 Nov 2022 12:15 AM IST

ராசிபுரத்தில் பெண்ணிடம் நகை பறித்த சேலம் வாலிபர் கைது

ராசிபுரம்:

ராசிபுரம் எல்லப்பா தெரு பகுதியை சேர்ந்தவர் அம்பேத்கர். இவருடைய மனைவி வளர்மதி (வயது 54). சேலை வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 28-ந் தேதி அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக முககவசம் மற்றும் ஹெல்மட் அணிந்த வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் திடீரென வளர்மதியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கம், மாணிக்கம் மற்றும் போலீசார் கார்த்திகேயன், புஷ்பராஜன், மோகன் குமார், பாலமுருகன், அருள்குமார், மகாலிங்கம் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் 95-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் சேலம் திருவள்ளுவர் நகர் முருகன் கோவில் 2-வது தெருவை சேர்ந்த கார்த்திக் (31) என்பவரை தனிப்படையினர் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் வளர்மதியிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ராசிபுரம் போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர். அவரிடமிருந்து நகை மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்