< Back
மாநில செய்திகள்
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது

தினத்தந்தி
|
5 Nov 2022 9:26 PM IST

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழகத்தை சேர்ந்த 2 விசைப்படகு மற்றும் அதில் இருந்த 8 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 8 மீனவர்களும் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மீனவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்த முழுமையான பெயர் விவரம் அதிகாரப்பூர்வமாக இன்று காலை தெரியவரும் என்று கூறப்படுகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்