நாமக்கல்
மோகனூர் பகுதியில் ஸ்கூட்டர் திருடிய 2 பேர் கைது
|மோகனூர் பகுதியில் ஸ்கூட்டர் திருடிய 2 பேர் கைது
மோகனூர்:
மோகனூர் அருகே உள்ள சீத்தப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 52). இவர் அணியாபுரத்தில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இவர் கடந்த 12-ந் தேதி தனது கடை முன் ஸ்கூட்டரில் சாவியை எடுக்காமல் அதிலேயே வைத்து விட்டு கடையில் வேலை செய்தார். பின்னர் மாலையில் பார்த்தபோது ஸ்கூட்டரை காணவில்லை. இதுகுறித்து அவர் மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.
இந்த நிலையில் மோகனூர் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள் கரூர் மாவட்டம் பெரியாண்டாங் கோவில் பெரியார் நகரை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் அகிலன் (வயது 22), கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனாம்புலியூர் முதலைப்பட்டியை சேர்ந்த வைரபெருமாள் மகன் செல்வராஜ் (வயது 32) என்பது தெரியவந்தது.
இவர்கள் அணியாபுரத்தில் பாலசுப்பிரமணியம், கிராயூர் அரசு மதுக்கடை மேற்பார்வையாளர் மகேஸ்வரன் ஆகியோரது ஸ்கூட்டர்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் 2 ஸ்கூட்டர்களையும் பறிமுதல் செய்தனர்.